பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை நீங்கள் கவனித்தது உண்டா.?
பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை நீங்கள் கவனித்தது உண்டா.?
உடனே "அய்யகோ.. பசுவை பற்றி பேசி விட்டான். இவன் ஒரு ஆன்ட்டி இந்தியன்"
என்று பாய்ச்சல்களை நிகழ்த்தத்தொடங்க வேண்டாம். நீங்கள் நினைக்கும்
அளவிற்கு இதுவொரு அரசியல் மேட்டர் அல்ல, முழுக்க முழுக்க உங்களின் மூளைக்கு
வேலை கொடுக்கும் - அறிவியல் சமாச்சாரம்.
பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை நீங்கள் கவனித்தது உண்டா.?
நீங்கள் கவனித்து பார்த்திருந்தால் புரியும் - பசுக்கள், உணவு உண்ணும்
போதும் அல்லது தண்ணீர் குடிக்கும் போதும் வடக்கே அல்லது தெற்கே தங்கள்
தலைகளைத் திருப்பிக் கொள்ளும். இதுவொரு பக்கம் அப்படியே இருக்கட்டும்.
"கனவா இருந்தாலும் ஒரு நியாயம் - தர்மம் வேணாமாடா" என்று நம்ம வடிவேலு சார்
சொல்லும் பிரபல சினிமா வசனம் ஞாபகம் இருக்கிறதா.? அதை ஒருபக்கம்
நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஏனெனில், பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை பற்றி மட்டுமின்றி நாம்
ஏன் கனவு காண்கின்றோம்.? கனவுகள் காட்சிப்படுவதற்கான பிரதான காரணிகள்
என்ன.? என்பது உட்பட உலகம் முழுக்க நிரம்பிக்கிடக்கும் விஞ்ஞானிகள் மற்றும்
ஆய்வாளர்களால் இம்மியளவும் புரிந்து கொள்ள முடியாத மிகவும் விசித்திரமான
ஏழு அறிவியல் புதிர்களை காணவுள்ளோம்.
ஒருவேளை இந்த புதிர்களில் ஏதாவது ஒன்றிற்கு விடை தெரிந்தால் நீங்கள் தான்
அடுத்த ஐன்ஸ்டீன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
07. குறிப்பிட்ட சில உயிரினங்கள் எங்கிருந்து வந்தன.?
பல இனங்கள் எந்த முன்னோர்களையும் கொண்டிருக்கவில்லை. முதல் நில
விலங்குகளுக்கு நன்கு வளர்ந்த மூட்டுகள் மற்றும் தலைகள் இருப்பதால்,
நீர்நில வாழ்வனவைகள் எப்போது மீன்களிலிருந்து உருவானது என்று யாருக்கும்
தெரியாது.
பாலூட்டிகளின் இனங்கள் எங்கும் காணப்படவில்லை
இதில் மேலும் குழப்பமான விடயம் என்னவென்றால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் இயற்கையான முறையில் (எரிகல் மோதல்) டைனோசர்கள் இனம் அழிந்த
நேரத்தில், பாலூட்டிகளின் இனங்கள் எங்கும் காணப்படவில்லை என்பது தான்.
06. கரும்பொருள் என்றால் என்ன.?
பிரபஞ்சத்தில் சுமார் 27% டார்க் மேட்டர் எனப்படும் கரும்பொருள் தான்
ஆக்கிரமித்துள்ளது. சரி அதென்ன கரும்பொருள்.? ஒருவேளை கருப்பாக இருக்குமோ.?
இல்லை - இந்த விண்வெளி பொருள் ஆனது மின்காந்த கதிர்வீச்சினால்
வெளிப்படுத்தவோ அல்லது தொடர்புகொள்ளவோ முடியாது, எனவே அதை
கண்டுபிடிப்பது என்பது மிகவும் சாத்தியமில்லாத காரியமாகும் எனவே தான்
அவைகள் கரும்பொருள் என அழைக்கப்படுகிறது.
இருப்பு பற்றிய நேரடி ஆதாரம்
சரி அப்போது டார்க் மேட்டர் என்ற விடயம் உருவானது எப்படி.? 60 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த கரும்பொருள் சார்ந்த முதல் கோட்பாடுகள் தோன்றின. ஆனால்
விஞ்ஞானிகள் அதன் இருப்பு பற்றிய நேரடி ஆதாரங்களை இன்னும் வழங்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
05. சூரிய மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன.?
புளூட்டோ கிரகமானது அதிகாரப்பூர்வ கிரக பட்டியலில் இருந்து
விலக்கப்பட்டதால், தற்போதுஎட்டு கிரகங்கள் உள்ளன என நம்பப்படுகிறது.
புளூட்டோவுக்கு அப்பால் உள்ள குயிப்பர் பெல்ட்டில் பனிக்கட்டி பொருள்கள்
உள்ளன. அந்த விண்வெளி பகுதியில் புளூட்டோவை விட பெரியதாக இருக்கும்
ஆயிரக்கணக்கான விண்வெளி பொருட்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
பாட புத்தகங்களை மீறி யோசித்தால்
மேலும் அந்த குயிப்பர் பெல்ட்டில் ஒரு பெரிய இடைவெளியை விஞ்ஞானிகள்
கவனித்தனர், அங்கு பூமி கிரகத்தை விட மிகவும் பெரிய அளவிலான கிரகங்கள்
பெல்ட்டில் உள்ள கற்கள் அனைத்தையும் தன் பக்கமாய் ஈர்த்து
கொண்டிருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன. ஆக, பாட புத்தகங்களை மீறி
யோசித்தால் நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளன
என்பதில் எந்த தெளிவான புள்ளி விவரங்களும் கிடையாது.
04. நாம் ஏன் கனவு காண்கிறோம்.?
கனவுகள் என்பது, சீரற்ற படங்கள் மற்றும் மூளை அலைகள் என்று சிலர்
நம்புகிறார்கள். மற்றவர்கள் கனவுகளை ஆழ்மன ஆசைகள், தீர்க்கப்படாத
பிரச்சினைகள் மற்றும் அனுபவங்கள் என்று கருதுகின்றனர். கனவுகள் பற்றிய
படிப்பை ஆனிரோலாஜி (oneirology) என்பர். அதன்கீழ் வரும் விளக்கமானது "கனவு
என்பது மனித ஆன்மாவில் ஆழமாக மறைந்து கிடக்கும் ஒன்றின் வெளிபாடு தான்.
ஆனால் அது என்னவென்று சரியாக தெரியவில்லை" என்று கூறுகிறது.
03. வலது கை மற்றும் இடது கை பழக்கம் - எப்படி சாத்தியம்.?
பெரும்பாலான மனிதர்கள் (அதாவது 70% முதல் 95%) வலது கை பழக்கம்
கொண்டவர்களாய் உள்ளன. மீதமுள்ள (அதாவது 5% முதல் 30% வரை) இடது கை பழக்கம்
கொண்டவர்களாய் உள்ளன. இதற்கு மரபணுக்கள் தான் காரணம் என்றாலும் கூட, இடது
கை மரபணு இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயப்படுத்தப்படும்போது
இந்த விடயத்தில், சமூக சூழல்களும் ஒரு பெரும் செல்வாக்கை கொண்டுள்ளன :
இடது கை பழக்கம் கொண்டுள்ள பிள்ளைகள் வலது கையால் எழுத வேண்டும் என்று
கட்டாயப்படுத்தப்படும்போது, அவர்களில் சிலர் வலது கை பழக்கம்
கொண்டவர்களாகவே மாற்றப்படுகின்றன. ஆனால், வலது கை மற்றும் இடது கை பழக்கம்
கொண்டவர்களாய் மனிதர்கள் உள்ளது ஏன்.? - என்பதில் தீர்க்கமான விளக்கம்
ஏதுமேயில்லை.
02. மெகாஃபோனா அழிவிற்கு காரணமென்ன.?
10,000 வருடங்களுக்கு முன் காணாமற்போன பெரிய விலங்குகள் தான் - மெகாஃபோனா
(Magafauna) என அறியப்பட்டன. சிலர் காலநிலை மாற்றங்கள் தான் மெகாஃபோனாவின்
அழிவிற்கு காரணமென்று நம்புகின்றனர், ஆனால் அதற்கு வலுவான சான்றுகள் இல்லை.
மற்றொரு கோட்பாட்டின் படி, விலங்குகள் பட்டினி காரணமாக இறந்துவிட்டன
என்று கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக அலாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்ட
கெடாது பேணு பாதுகாக்கப்பட்ட மாமோத்களின் வயிறுகளில் செரிமானமாகாத
பச்சைப்புல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக, இதன் அழிவு சார்ந்த தெளிவில்
குழப்பம் நீடிக்கிறது.
01. பசுக்களிடம் காந்த திசைகாட்டி திறன் உள்ளதா.?
கூகிள் எர்த் மூலம், ஆயிரக்கணக்கான மேய்ச்சல் பசுக்களின் படங்களை
முன்னிலைப்படுத்தி விஞ்ஞானிகளால் நிகழ்த்தப்பட்டதொரு ஆய்வில் ஒரு
விசித்திரமான பசுக்களின் பழக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 70
சதவிகிதம் பசுக்கள், உணவு உண்ணும் போதும் அல்லது தண்ணீர் குடிக்கும் போதும்
வடக்கே அல்லது தெற்கே தங்கள் தலைகளைத் திருப்பிக் கொள்கின்றன.
காந்தப்புலம் சார்ந்த ஜீவி
காந்தப்புலம் சார்ந்த ஜீவி
பசுக்களின் இந்த விசித்திரமான செய்லபாடானது நிலப்பகுதி, வானிலை மற்றும் இதர
காரணிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து கண்டங்களிலும் பொதுவாக
காணப்படுகிறது. இதுவொரு இயற்கையான நடவடிக்கையா அல்லது காந்தப்புலம் சார்ந்த
ஜீவிகளாய் பசுக்கள் திகழ்கிறனவா என்பது சார்ந்த தெளிவான விளக்கங்கள்
இல்லை.
No comments: