Breaking

poission flowers


மரணத்தை பரிசளிக்கும் பூக்களை பார்த்திருக்கிறீர்களா?   பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
கால்மியா பூ :
கால்மியா பூ : பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப்பூவில் அதிக விஷத்தன்மை உள்ளது. இதன் இலைகளை பிய்த்து வாயில் போட்டால் வாந்தியில் துவங்கி ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும்.
ஒனாந்தே பூ :
  ஒனாந்தே பூ : ஸ்வீடன், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது. இதனை சாப்பிடுவதால் போதை ஏறும். தொடர்ந்து உட்கொண்டால் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட 70 சதவீதம் வரை வாய்ப்புகள் உண்டு. 
அடேனியம் பூ :  
அடேனியம் பூ : பூக்களைப் பறித்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைப்பார்கள் அந்த தண்ணீர் எல்லாம் வற்றியபிறகு பூக்கள் வெந்து கெட்டியான பிசினாக மாறும். இது பயங்கர விஷத்தன்மை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில்,வேட்டைக்காரர்கள் வேட்டையாடப் பயன்படுத்தும் அம்புகளில் இந்த விஷத்தை தடவிக் கொள்வார்கள். 
 கேஸ்டர் பூ :
 கேஸ்டர் பூ : இந்தியாவில் இந்த செடியை அதிகம் காணமுடியும். அதிக விஷத்தன்மையுள்ள பூ என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. 
 டெத் பூ :
 டெத் பூ : இந்த வகை பூக்களில் இரண்டு வகை உண்டு . ஒன்று, விஷத்தன்மை இல்லாதது. இன்னொன்று, அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இரண்டையும் அவ்வளவு எளிதாக வித்யாசம் காண முடியாது. இந்த வகைப் பூக்கள் உள்ளுறுப்புக்களை பாதித்து மரணத்தை உண்டாக்கும்.
கடும்புல் பூ:
கடும்புல் பூ: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ ‘நிலவின் பூ' என்றும் சொல்லப்படுகிறது. இது காலை நேரங்களில் மொட்டாக இருக்கும் இரவில் தான் படிப்படியாக விரியும். விரிந்த இரண்டு மணி நேரத்தில் சுருங்கிவிடும்.
தீக்குச்சிப்பூ :
தீக்குச்சிப்பூ : இதன் வடிவமே இதற்கு இப்பெயர் வரக்காரணம். அர்ஜன்டீனா, ப்ரேசில் நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பூ விற்கு பெரிதாக பராமரிப்பு தேவையில்லை. ஒரு முறை ஊன்றிவிட்டால் அதன் தண்டுகளில் இருந்து கூட புதிய செடி உருவாகிடும். 
கங்காரு பாதம் பூ :
 கங்காரு பாதம் பூ : இதனைப் பார்க்க கங்காருவின் விரிந்த பாதங்களைப் போன்றே காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவை இருப்பிடமாகக்கொண்ட இந்த பூவை பூங்கொத்துகளில் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகப்படியான தேன் கிடைக்கும்.
பாட்டில் பூ :
 பாட்டில் பூ : பாட்டிலை கழுவ உதவும் பிரஷ் போல இருப்பதால் இதற்கு இப்பெயர். இதிலேயே 40க்கும் மேற்ப்பட்ட வகைகள் இருக்கின்றன. இவற்றுக்கு வாசம் எதுவும் இருக்காது.

No comments:

of

Powered by Blogger.