10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!
தற்போது வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
குறித்த தேர்ச்சி விகித விபரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இதில் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம்
98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும்,ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத
தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத
தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விபரம்:
மொழிப்பாடம் 96.42 %
ஆங்கிலம் 96.50 %
கணிதம் 96.18 %
அறிவியல் 98.47 %
சமூக அறிவியல் 96.75 %
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
சிவகங்கை 98.50 %
ஈரோடு 98.38 %
விருதுநகர் 98.26 %
கன்னியாகுமரி 98.07 %
ராமநாதபுரம் 97.94 %
மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்:
481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 9402
451 - 480 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 56,837
426 - 450 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 64,144
401 - 425 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 76,413
301 - 400 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3,66,084
201 - 300 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3,12,587
176 - 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 26,248
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் 38,682
இந்தாண்டு 5456 அரசுப்பள்ளிகள் தேர்வு எழுதியதில் மொத்தம் 1687
அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 94.4 சதவீதம்
பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை
விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.4 சதவீதமாகவும், மாணவர்களின்
தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது.
10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்!
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
இத்தேர்வை தனித் தேர்வர்களாக 5 திருநங்கைகளோடு, 186 சிறை கைதிகளும் எழுதியுள்ளனர். இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 23-ஆம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகி உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் .
மேலும் ஊடகவியலாளர்கள் மேற்கண்ட இணையதள முகவரிகளில் 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடத்தையும்,ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
No comments: