Breaking

ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- சீமான்

 ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- சீமான்

நெல்லை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவே மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் மீது போலீஸார் வேண்டும் என்றே துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளனர். 13 பேர் உயிர்களை காவு வாங்கியதற்கு பிறகு ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

13 உயிர்கள்


13 உயிர்கள் 
அதை ஏன் 100 நாட்களாக அந்த பகுதி மக்கள் போராடிய போது வெளியிட்டிருக்கலாமே. 13 உயிர்களாவது தப்பியிருக்குமே. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு மக்களிடம் அமைதியை ஏற்படுத்திய போலீஸார் முன்னர் ஏன் அப்படி நடக்கவில்லை.
போராட்டம்

போராட்டம் 
இதில் இருந்தே கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. பொதுமக்கள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்திருந்தால், தங்கள் மனைவி, கைக்குழந்தைகளுடன் போராட்டத்துக்கு வந்திருப்பரா.
துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு 
அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்களை போலீஸாரே திட்டமிட்டு கலவரத்துக்கு தூண்டியுள்ளனர். கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த துணை வட்டாட்சியர் உத்தரவிட்டார் என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. கலவரத்தில் 13 பேர் மட்டும்தான் கொல்லப்பட்டனரா இல்லை இன்னும் பலர் கொல்லப்பட்டுள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை.


சட்டசபையில் தீர்மானம் 

இனி ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் மீதுள்ள உண்மையான அக்கறை வெளிப்படும். இவர்கள் மூடுகிறோம் என்று போட்ட உத்தரவு நீட் தேர்வுக்கு போட்டது போல் ஆகிவிட கூடாது. நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதும் இது கோர்ட்டு உத்தரவு என நீட் தேர்வை அனுமதித்து விட்டார்கள். இது போல் ஸ்டெர்லைட்டிலும் நடந்து விடக் கூடாது என்றார் சீமான்.

No comments:

of

Powered by Blogger.