கதிரவனின் படைப்பாகிய கானல் நீரே
நீயோ! காற்றடித்தால் கலைகின்றாய்
மழையடித்தால் மறைகின்றாய்
என்னே உனது படைப்பின் மகிமை!
பங்குனி மாதத்தில் பளிச்சென்று சிரிக்கிறாய்
சித்திரை மாதத்தில் சிகரம் தொட்டு முத்திரை பதிக்கிறாய்
உச்சந்தலையில் சுட்டு அப்பப்பா என்று சொல்லி எங்களை அமர வைப்பவனே
என்னே உனது படைப்பின் அற்புதம் !
உனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த காலங்களுமுண்டு
நீ எதற்காக வந்தாய் என வஞ்சித்த காலங்களுமுண்டு
நீயோ! சற்றும் செவிசாய்க்காமல்
செவ்வனே பணி செய்கின்றாய்
ஒளி பரப்புகிறாய்
என்னே உனது படைப்பின் பெருந்தன்மை!
விவசாயிகளின் வியர்வைத் துளிக்கு வேராய் இருப்பவனே
விவசாயத்திற்கு மூல காரணமாய் திகழ்ந்து கொண்டிருப்பவனே
என்னே உனது படைப்பின் அர்ப்பணிப்பு!
காகிதமும் எரிந்து போகும்
காட்டு மரங்களும் கருகிப் போகும்
உன்னால் தீக்குச்சி இல்லாமலே
என்னே உனது படைப்பின் தனித்துவம்!
நிறத்துக்கேற்ப மாறுகின்ற பச்சோந்தியை போல
நிலப்பரப்பின் தன்மைக்கேற்ப மாறுகின்றவனே!
ஒரு போதும் மறவாதே
இம்மனித இனம் உனக்கு என்றென்றும் அடிமை என்பதை.!
சுட்டெரித்து சிரிக்கும் சூரியனே!
Reviewed by Unknown
on
23:56
Rating: 5
No comments: