ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு-
வீடியோ
மதுரை:
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர்
மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை
விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்ததில் இருந்துதான் மக்கள் போராட்டம்
உச்சம் அடைந்தது. நோய் உண்டாக்கும் அலைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தும் கூட ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம்
ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில்,
324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து
ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது.சிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா
செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு
ஆலை விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது என பல கேள்விகள்
எழுப்பப்பட்டது. தற்போது இதுகுறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு
உள்ளது.
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை
பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு
வழங்கப்பட்டு உள்ளது. ஹைகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார்.சென்னை
உயர்நீதிமன்றத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தீர்ப்பை வாசித்தனர்.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை
கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.இதனால் ஆலை
விரிவாக்க பணியை உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். 2வது பிரிவை அனுமதி பெற்ற
இடத்தில் தொடங்கவில்லை என்று தீர்ப்பு.
விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை கருத்துக் கேட்பு
கூட்டத்தில் கேட்க வேண்டும். சுற்றுசூழல் அனுமதி கோரும் வேதாந்த குழுவின்
மனுவை பரிசீலிக்க வேண்டும். மனுவை பரிசீலித்து 4 வாரத்திற்கு
முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments: